/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதயாத்திரையில் இரவு விபத்துக்கள்
/
பாதயாத்திரையில் இரவு விபத்துக்கள்
ADDED : ஆக 04, 2024 06:13 AM
விருதுநகர் : சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்பவர்களுக்கு விழிப்புணர்வு, இரவு விபத்துக்களை தவிர்க்கபோலீசார்ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் வழங்க வேண்டும் என்ற பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ஆடி மாதத்தில் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம்.
இவர்கள் இரவு முழுவதும் பாதயாத்திரையாக நடந்து காலை சூரியன் சுட்டெரிக்க துவங்கும் முன்பு ஒய்வு எடுக்கின்றனர். இப்படி செல்பவர்களுக்குபோலீசார்சிவப்பு நிற ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது ஸ்டிக்கர் வழங்கப்படவில்லை.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலைச் சேர்ந்த மேல நீலிதநல்லுாரைச் சேர்ந்தவர்கள் பவுன்ராஜ் 47, மகேஷ் 36, முருகன் 48 ஆகியோர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 1:30 மணிக்கு சாத்துார் என். சுப்பையாபுரம் விலக்கு அருகே சென்ற போது அவர்கள் பின்னால் வந்த சிமெண்ட் லோடு ஏற்றிய லாரி மோதியதில் மூவரும் பலியாகினர்.
இது போன்ற சம்பவங்களில் பக்தர்கள் நடந்து செல்வது தெரியாமல் லாரிகள் மோதுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. பக்தர்களுக்கு கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் பகுதியில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த புரிதல் இல்லை.
எனவேபோலீசார்பாதயாத்திரையாக செல்பவர்களுக்கு விழிப்புணர்வு, இரவில் ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.