/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீர், வாறுகால் இல்லை, மண் ரோடால் அவதி; சிவஞானபுரம் வளர்பிறை நகர் மக்கள் தவிப்பு
/
குடிநீர், வாறுகால் இல்லை, மண் ரோடால் அவதி; சிவஞானபுரம் வளர்பிறை நகர் மக்கள் தவிப்பு
குடிநீர், வாறுகால் இல்லை, மண் ரோடால் அவதி; சிவஞானபுரம் வளர்பிறை நகர் மக்கள் தவிப்பு
குடிநீர், வாறுகால் இல்லை, மண் ரோடால் அவதி; சிவஞானபுரம் வளர்பிறை நகர் மக்கள் தவிப்பு
ADDED : செப் 01, 2024 11:53 PM

விருதுநகர்: குடிநீர் இணைப்பு இல்லாததால் குடிநீர் விலை கொடுத்து வாங்கும் நிலை, வாறுகால், மின் விளக்கு, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மழை, இரவு நேரத்தில் வாகனங்களில் செல்ல முடியாத சூழ்நிலை என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்விருதுநகர் சிவஞானபுரம் வளர்பிறை நகர் மக்கள்.
விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சியில் உள்ள வளர்பிறை நகரில் 20 குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதி புறநகர் பகுதியாக இருந்தாலும் நகர் பகுதிக்கு அருகே இருப்பதால் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இங்குள்ள வீடுகளுக்கு 10 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் வீடுகளுக்கு தேவையான குடிநீரை வாகனங்கள் மூலம் குடத்திற்கு ரூ. 8 முதல் ரூ.12 வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.
வடமலைக்குறிச்சியில் இருந்து வளர்பிறை நகர் செல்லும் மெயின் ரோடு பல ஆண்டுகளாக அமைக்கப்படவில்லை.
மழைக் காலத்தில் சேறும், சகதியுமாகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின் விளக்குகள் இல்லாததால் இரவு பணி முடிந்து நடந்து, வாகனங்களில் வருபவர்கள் இடறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவு நீர் செல்ல வாறுகால் வசதி இல்லை. மழையின் போது மழை நீருடன் கழிவு நீர் கலந்து ரோட்டில் ஆறாக ஓடுகிறது.
வடமலைக்குறிச்சி சர்வீஸ் ரோடு நிறுத்தத்தில் பயணிகள் நிற்பதற்கும், வளர்பிறை நகர் பகுதியிலும் பஸ் ஸ்டாப் இல்லை. இதனால் வெயில், மழையில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.