
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் யானை, காட்டு மாடு, மிளா, கரடி, காட்டுப்பன்றி, புள்ளிமான் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் அதிகம் இவை வறட்சி காலங்களில் வனப்பகுதி ஒட்டியுள்ளராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிப்பு பகுதிவிவசாய நிலங்களில் தண்ணீர், உணவு தேவைகளுக்காக புகுந்து பயிர்களை சேதம் செய்வது நிகழ்வது வாடிக்கை.
இந்நிலையில் சிறிய விலங்குகளின் பாதிப்பை விட யானைகள் புகுவதால் விளை நிலங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் அதிக சேதம் ஏற்படுவதை தொடர்ந்து வனத்தை ஒட்டிய பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு யானைகள் வராமல் தடுக்க வனத்துறை சார்பில் அகழி தோண்டப்பட்டது.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிப்பு பகுதிகளில்அய்யனார் கோயில் அருகே பல்வேறு இடங்களில்அகழிகள் சேதமடைந்தும், மண்மேவியும்உள்ளதால் யானைகள் வெளியேறும் பாதையாக உபயோகிக்கின்றன. காலப்போக்கில் மண் மூடியதுடன் இவற்றை பராமரிக்காததால் யானைகள் தனியாகவும் கூட்டமாகவும் வந்து சேதம் செய்து வருகின்றன.
மாவட்டத்தில் மாதந்தோறும் நடக்கும் விவசாயி குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் யானைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியும் வனத்துறையினர் ராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே மண் மேவிய அகழியை செப்பனிடாமல் வைத்துள்ளதால் விவசாயிகளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து முருகன் விவசாயி: யானைகள் வரவை கட்டுப்படுத்த விவசாயிகளின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பு இல்லாததால் அதிக பொருட்செலவில் மின் வேலி அமைத்து பாதுகாக்க வேண்டி உள்ளது. தற்போது அய்யனார் கோயில் பிட் கல்லாத்துக்காடு, புரசம்பாறை, வளக்கட்டு கருப்பசாமி கோயில் அருகாமை பகுதிகளிலும், காட்டை அடுத்த புதிய பகுதிகளுக்குள்ளும் நுழைந்துள்ளது.
இதற்கு தீர்வாக வனப்பகுதியில் இருந்து வெளியேற முடியாத படி விலங்குகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்வதுடன்,புதிதாக நிதி ஒதுக்கி அகழிகள் வெட்டப்படவேண்டும். அதோடுஏற்கனவேவெட்டப்பட்டஅகழிகளைமண் மேவாமல், சேதடைமயாமல் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.