/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத சுகாதார வளாகம், தேங்கும் குப்பை, கழிவுநீர்
/
செயல்படாத சுகாதார வளாகம், தேங்கும் குப்பை, கழிவுநீர்
செயல்படாத சுகாதார வளாகம், தேங்கும் குப்பை, கழிவுநீர்
செயல்படாத சுகாதார வளாகம், தேங்கும் குப்பை, கழிவுநீர்
ADDED : மார் 11, 2025 04:38 AM

ராஜபாளையம்: குடியிருப்பு அருகே திறந்தவெளி கிணறு ,சாக்கடையில் தேங்கும் கழிவு நீர், செயல்படாத மகளிர் சுகாதார வளாகம் என பல்வேறு பிரச்சனைகளால் கோபாலபுரம் ஊராட்சி மக்கள் அவதியில் உள்ளனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோபாலபுரம் ஊராட்சியில் அனந்தநாயக்கன்பட்டி கிராமத்தை உள்ளடக்கியது.இரண்டு இடங்களிலும் அமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. குடியிருப்புகளை ஒட்டி குவிக்கும் குப்பை வாங்காமல் ஆங்காங்கே குவிந்துள்ளன. வீடுகளை ஒட்டி விவசாய நிலங்களில் ஆக்கிரமித்துள்ள செடிகள், புதர்கள் அடர்ந்து விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கோபாலபுரம் கிராமத்திற்கான மயானம் தண்ணீர் ஓய்வு அறை என எவ்வித வசதியும் இன்றி மழை வெயில் நேரங்களில் ஒதுங்க வழி இன்றி சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தெற்கு தெரு ரோடு குடிநீருக்காக தோண்டிய பேவர் பிளாக் பள்ளம் செப்பனிடாமல் உள்ளது. ஊராட்சி பள்ளி அருகே குப்பை குவிப்பதும் ஓடையில் சாக்கடை தேக்கம் அடைவதால் தொற்று அபாயம் ஏற்படுகிறது.
கிராமத்தை சுற்றிலும் 5 குவாரிகள் செயல்படுவதால் கனரக வாகனங்கள் சென்று எந்நேரமும் ரோடுகளில் துாசிகள் பறந்தும், அடிக்கடி சேதம் ஆகிறது. தெரு நாய்களால் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.