/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்; போக்குவரத்து பாதிப்போடு விபத்திற்கும் வாய்ப்பு

ADDED : ஏப் 03, 2024 07:08 AM

சிவகாசி : சிவகாசியில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சிவகாசியில் பல்வேறு தேவைகளுக்காக டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் வருகின்றன.
காரனேசன் சந்திப்பு, நாரணாபுரம் முக்கு, பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப், இரட்டை பாலம், மணி நகர் முக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை எங்குமே செயல்படவில்லை.
சிக்னல்கள் அனைத்தும் வெறும் காட்சிப் பொருளாக உள்ளன. இதனால் வாகனங்கள் முறையாக செல்லாமல் அதில் வருபவர்கள் ஒருவருக்கொருவர் முந்தி சென்றும், காத்திருக்காமல் குறுக்கே புகுந்தும் விபத்துக்கு வழி ஏற்படுத்துகின்றனர்.
டிராபிக் போலீசாரும் பற்றாக்குறையாக இருப்பதால் அவர்களால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
போலீசார் பற்றாக்குறையால் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்த போலீசார் பணியில் இல்லை.
இதனால் அதிகமான போக்குவரத்து நெருக்கடியால் நகரே ஸ்தம்பிக்கிறது.
எனவே அனைத்து இடங்களிலும் சிக்னல்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.