நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.
செவிலியர் அமைப்பை உருவாக்கிய பிளாரன்ஸ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தப்பட்டது. மருத்துவ அலுவலர் இளங்கோவன் தலைமை வகித்தார். செவிலியர்கள் கண்காணிப்பாளர்கள் செல்லதாய் , சாந்தி, லதா, திலகவதி, 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். மருவத்துவமனை அலுவலர்கள் செவிலியர்களை வாழ்த்தினர்.