ADDED : ஆக 07, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டக் கிளைச்செயலாளர் சியாமளா தலைமை வகித்தார். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவது, காலமுறை ஊதியம் வழங்குவது, பணி நிரவல் என்ற பெயரில் ஊழியர்களைத் துாரத்து இடங்களுக்கு மாற்றம் செய்து மன அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
