ADDED : ஆக 07, 2026 07:05 PM
சிவகாசி, ஆக. 8-
சிவகாசியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம் சென்று, உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
சிவகாசியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகர தி.மு.க., தெற்கு, கிழக்கு ஒன்றியம் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. மாநகர தி.மு.க., செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார்.
அண்ணாதுரை சிலை முன் தொடங்கிய ஊர்வலம், சிவன் கோயில் முன் நிறைவடைந்தது. தொடர்ந்து கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க., நிர்வாகிகள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மேயர் சங்கீதா, வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா, ஒன்றிய செயலாளர் விவேகன் ராஜ், பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், பகுதி செயலாளர் காளிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
