ADDED : மே 30, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் கட்டடங்களை இடிக்க வருவாய்த் துறையினர் முயற்சிப்பதாக கூறி தாலுகா அலுவலகத்தில் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமம் உள்ளது. ஒரே பிரிவை சேர்ந்த இரண்டு பகுதிகளில் வசித்து வரும் ஒரு பிரிவினரின் கட்டடங்களை இடிக்க வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். வழக்கு நிலுவையில் இருந்து இறுதி தீர்ப்பு வரும் முன்னரே இடிக்கும் முயற்சி நடைபெறுவதாக கூறி அதற்கு எதிர்ப்பு கிராமத்தினர் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர்.
துணை தாசில்தார் அப்பாதுரையிடம் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தும் நோட்டீசை திரும்ப பெறவும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.