/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயிலிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
/
ரயிலிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
ADDED : ஆக 09, 2024 12:17 AM
நரிக்குடி: திருச்சியிலிருந்து மானாமதுரை நரிக்குடி வழியாக விருதுநகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது. அன்றிரவு மானாமதுரை கடம்பன்குளம் கேட் அருகே ரயிலில் வந்த பயணி ஒருவர் தவறி விழுந்ததார்.
ரயில் ஓட்டுநர் கேட் ஊழியருக்கு தகவல் தெரிவித்தார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணையில் விருதுநகர் மாவட்டம் முள்ளிச்சாவல் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த அயோத்தியம்மாள் 64, மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்தது.
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரம் செல்லும் பாசஞ்சர் ரயில் நரிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டு 20 நிமிட தாமதத்திற்கு பின் அனுப்பி வைக்கப்பட்டது.