ADDED : ஜூன் 20, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி கெப்பிலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் 80. நேற்று முன்தினம் அவரது வீட்டிலிருந்து உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது விருதுநகரை சேர்ந்த பள்ளி பஸ் மாணவர்களை ஏற்றிக் கொண்டிருந்தது ஓரமாக நடந்து சென்ற மாரியம்மாளை கவனிக்காத டிரைவர் விருதுநகரைச் சேர்ந்த வேலுச்சாமி பஸ்சை நகர்த்தினார்.
மூதாட்டி தடுமாறி கீழே விழுந்ததில் அவர் மீது பஸ் ஏறியதில் உடல் நசுங்கியது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.