ADDED : மார் 22, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் நேற்று 2ம் நாள் காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் சாத்துார் கோல்வார்பட்டியை சேர்ந்த தமிழக மக்கள் நல கட்சி முத்துக்கண்ணு வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் ஜெயசீலன் மனுவை பெற்றுக் கொண்டார்.
2ம் நாள் வரை 16 பேர் விண்ணப்ப படிவங்களை பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் இன்று(மார்ச் 22) தான் கடைசி. அடுத்த வேட்புமனு தாக்கல் நாள் மார்ச் 25ல் துவங்கும்.டி.எஸ்.பி., பவித்ரா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

