/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மனித வளத்தின் தலைநகரமாக உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
/
இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மனித வளத்தின் தலைநகரமாக உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மனித வளத்தின் தலைநகரமாக உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மனித வளத்தின் தலைநகரமாக உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
ADDED : ஜூலை 20, 2024 12:14 AM
விருதுநகர் : இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மனித வளத்தின் தலைநகரமாக உள்ளது என அமைச்சர்தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 796 அரசு பள்ளிகளில் பணிபுரியும் 2083 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினியை அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, வழங்கினர். விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
விழாவில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது:
இன்றைய சூழலில் குழந்தைளுக்கு கணினி சாதாரணமானதாக உள்ளது. பெரியவர்களை விட அலைபேசியை குழந்தைகள் எளிதாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு இணையாக ஆசிரியர்களின் கற்றல் முறை இருக்க வேண்டும்.ஆசிரியர்கள் படித்த காலத்தில் இருந்த கல்வி முறைக்கும், இன்றைய கல்வி முறைக்கும் பல வித்தியாசம் உள்ளது.
குழந்தைகளுக்கான அனைத்து சந்தேகங்களையும் நம்மால் தீர்க்க முடியும். சமுதாயத்தில் ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். இந்நாடு எதிர்காலத்தில் ஒழுக்கம், நாட்டுப்பற்றுள்ள நாடாக இருப்பது ஆசிரியர்கள் கையில் உள்ளது, என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழகத்தில் புதிய தொழில்களை துவங்க நிறுவனங்கள் ஆயிரகணக்கில் கோடிகளை முதலீடு செய்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மனித வளத்தின் தலைநகரமாக உள்ளது. இதற்கு தொடக்ககல்வியில் இருக்கும் அடிப்படை கல்வி அமைப்பே காரணம்.
உயர்கல்வி செல்லும் மாணவர்களின் விழுக்காடு, பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம், ஆசிரியர்கள், மாணவர்களின்திறன் மேம்பாடு என எல்லா குறியீடுகளிலும் கால் நுாற்றாண்டுக்கும் மேலாக விருதுநகர் மாவட்டம் சிறந்து விளங்குகிறது.
தமிழகத்தில் 34க்கும் அதிகமான துறைகள் இருந்தாலும் அதிகமாக நிதி பெறக்கூடிய துறை பள்ளிக்கல்வித்துறை, என்றார்.

