/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடியிருப்புக்கு மத்தியில் திறந்தவெளி கிணறு துார்வார டெண்டர் விட்டும் துவங்காத பணிகள்

ADDED : மே 19, 2024 04:54 AM

சிவகாசி ; சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் செல்லியாரம்மன் கோயில் தெரு குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்த நிலையில் உயிர்பலி வாங்க காத்துக் கொண்டிருக்கும் கிணற்றினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கிணற்றினை துார்வார டெண்டர் விடப்பட்டும் பணிகள் துவங்காததால் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் செல்லியாரம்மன் கோயில் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கிணறு உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிணறு இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது கிணறு பயன்பாட்டில் இல்லை. இதனால் இந்த கிணறை குப்பை கிடங்காக மாற்றிவிட்டனர். கழிவு நீரும் கிணற்றில் விடப்படுவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. தவிர பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் கிணறு மாறிவிட்டது.
தடுப்புச் சுவர் இல்லாமல் தரை மட்டத்தில் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் தடுமாறி கிணற்றில் விழ வாய்ப்பு உள்ளது. எனவே கிணற்றை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வருதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது.
இதற்காக ரூ. 3.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரையிலும் பணிகள் துவங்கவில்லை. திறந்த நிலையில் உள்ள இந்தக் கிணறு உயிர் பலி வாங்குவதற்குள் துார்வாரி மூடி அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.