நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய கட்டடங்களை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
தலா ரூ 42.65 லட்சத்தில் கட்டப்பட்டகோசுகுண்டு, குண்டலகுத்துார் கிராமசெயலகம் , ரூ 12 லட்சத்தில் கட்டப்பட்ட நாருகாபுரம் அங்கன்வாடி பள்ளி, ரூ 8 லட்சத்தில் கட்டப்பட்டநென்மேனி பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
பின்னர் சிறு குளம் கிராமத்தில் ரூ 22 லட்சம் மதிப்பில் கட்டடப் படவுள்ள நுாலக கட்டடத்திற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார்.வட்டாரவளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன், மற்றும் அலுவலர்கள், ஊராட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.