/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புகோட்டையில் நீதிமன்றங்கள் திறப்பு
/
அருப்புகோட்டையில் நீதிமன்றங்கள் திறப்பு
ADDED : ஜூலை 27, 2024 05:40 AM

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் காணொளி காட்சி மூலம் 4 கோர்டுகளை சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்.
அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சப்கோர்ட், குற்றவியல் கோர்ட், மாவட்ட உரிமையியல் கோர்ட், முதன்மை கோர்ட் உட்பட கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன. தற்போது கூடுதல் மாவட்ட உரிமையியல் கோர்ட்டை நேற்று மாலை சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், ராஜபாளையம் சப் கோர்ட், காரியாபட்டி, வத்திராயிருப்பு மாவட்ட உரிமையியல் கோர்ட், நிதித்துறை நடுவர் கோர்ட்டுகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஸ் சந்திரா, புகழேந்தி, ராமகிருஷ்ணன், சட்ட துறை அமைச்சர் ரகுபதி, விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயக்குமார், கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டனர்.
விழாவில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதிகளை சேர்ந்த வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி பிரீத்தா நன்றி கூறினார்.
- - -
படம் உள்ளது