ADDED : செப் 17, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் விருதுநகர் - வடமலைக்குறிச்சி ரோட்டில் பாவாலி அருகே புதிய உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.13 கோடியில் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. தற்போது பாலப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் ஜெயராணி பாலத்தை ஆய்வு செய்தார். விருதுநகர் கோட்டப் பொறியாளர் பாக்யலட்சுமி, உதவிக்கோட்டப் பொறியாளர் கணேசன், உதவிப் பொறியாளர் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.