நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் ராஜபாளையம் பொன்னகரம், ஜவஹர் மைதானம், பூபதி பேங்க், பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் அழகாபுரியான், ஜெ. பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், நகரச் செயலாளர்கள் பரமசிவம், துரை முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமையில் அரசு மகப்பேறு மருத்துவமனை, சாந்தி தியேட்டர் முன்பு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. நகர் செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.