ADDED : ஜூலை 26, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் உறுப்பு தான தினம்ஆக.
3ல் அனுசரிக்கப்பட உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் தலைமை தபால் நிலைய ஊழியர்கள் சார்பில் ஊர்வலம் நடந்தது. இதில் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா, உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் சுயம்பு கலா தலைமை வகித்தனர். பாண்டியன் நகர் தேவர் சிலை வரை ஊர்வலம் சென்றனர். அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி ஆகிய மூன்று தலைமை தபால் நிலையங்களிலும் ஊர்வலம் நடந்தது.