/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஓ.ஆர்.எஸ்., கரைசல்
/
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஓ.ஆர்.எஸ்., கரைசல்
ADDED : மே 03, 2024 05:02 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அந்தந்த பகுதிகளில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் நேரத்தில் வெளியே செல்பவர்களுக்கு உடலில் தேவை யான ஆற்றல் இல்லாமல் மயக்கம், சோர்வு ஆகிய பாதிப்புகள் ஏற்படும். இதனால் ஏற்படும் ஆற்றல் இழப்பை தடுக்க ஏற்கனவே நகர், ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் கார்னர் அமைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சுகாதாரத்தறை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தல், உள்ளாட்சி பகுதிகளில் ஓ.ஆர்.எஸ்., கரைசலை அருந்திக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலுக்கு தேவையான எலக்ட்ரோல் அளவை அதிகரித்து கொள்ள முடியும்.
விருதுநகர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதா மணி கூறியதாவது: நகர், ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் ஏற்கனவே ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கப்படுகிறது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அந்தந்த பகுதிகளில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. இதை மக்கள் தேவையான போது அருந்திக்கொள்ள முடியும், என்றார்.