/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எரிச்சநத்தத்தில் குப்பை கிடங்காக மாறிய ஊருணி *துார்வார கோரிக்கை
/
எரிச்சநத்தத்தில் குப்பை கிடங்காக மாறிய ஊருணி *துார்வார கோரிக்கை
எரிச்சநத்தத்தில் குப்பை கிடங்காக மாறிய ஊருணி *துார்வார கோரிக்கை
எரிச்சநத்தத்தில் குப்பை கிடங்காக மாறிய ஊருணி *துார்வார கோரிக்கை
ADDED : மே 04, 2024 04:42 AM

சிவகாசி: சிவகாசி எரிச்சநத்தம் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் உள்ள ஊருணி குப்பை கிடங்காக மாறியதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. ஆகாய தாமரைச் செடிகளும் ஆக்கிரமித்துள்ள ஊருணியை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே எரிச்சநத்தம் பஸ் ஸ்டாப்பில் இருந்து விருதுநகர் செல்லும் ரோட்டில் ஊருணி உள்ளது. இந்த ஊருணி 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளிக்க, துணி துவைக்க என பயன்பாட்டில் இருந்தது. நாளடைவில் ஊருணி கழிவு நீர் தேக்கமாக மாறிவிட்டது. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், கடைகளின் கழிவுகளும் ஊருணியில்தான் கலக்கின்றது. மேலும் ஒட்டுமொத்த குப்பைகளும் ஊருணியில்தான் கொட்டப்படுகின்றது. மேலும் ஊருணி முழுவதும் பாசி படர்ந்து நிறம் மாறிவிட்டது. இதனால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. ஊருணி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மெயின் ரோட்டில் இருப்பதால் கடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஊருணியை துார்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.