/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் மேல்நிலைத்தொட்டி
/
இடியும் நிலையில் மேல்நிலைத்தொட்டி
ADDED : ஆக 09, 2024 12:18 AM

நரிக்குடி: என்.முக்குளத்தில் இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி உள்ளதால் விபத்து அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர். இடித்து அப்புறப்படுத்தி, புதிய மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
நரிக்குடி என்.முக்குளத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து, கம்பிகள் துருப்பிடித்து, வெளியில் தெரிவதுடன், கான்கிரீட் சேதமடைந்து உள்ளன. பில்லர்கள் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. இதில் தான் இன்னும் தண்ணீர் ஏற்றப்பட்டு ஊருக்குள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
அது மட்டுமல்ல எடை தாங்காமல் எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் அக்கிராமத்தினர் உள்ளனர். அப்பகுதியில்தான் பாலர் பள்ளி மாணவர்கள், கிராமத்தினர் கூடும் இடமாக உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் புதிய மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
பணிகள் முடிந்து பல நாட்களாக திறக்கப்படாமல் கிடப்பில் போட்டனர். விபத்திற்கு முன் பழைய மேல்நிலைத் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும். புதிய மேல்நிலைத் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.