/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வழிகாட்டி பலகைகளுக்கு வர்ணம் பூசும் பணி
/
வழிகாட்டி பலகைகளுக்கு வர்ணம் பூசும் பணி
ADDED : செப் 04, 2024 01:10 AM

விருதுநகர்: விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை மூலம் விருதுநகர் - எரிச்சநத்தம் வழியாக அழகாபுரி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலைகளான வத்திராயிருப்பு, மகாராஜபுரம், அழகாபுரி, விருதுநகர் ரோட்டில் உள்ள வழிகாட்டி பலகைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது.
விருதுநகர், அதனை சுற்றிய பகுதிகளில் ஊர்களின் பெயர், துாரம் உள்ளிட்ட தகவல்களை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்வதற்காக மாநில நெடுஞ்சாலைகளில் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டது.
இவை பெரும்பாலும் ஊரகப்பகுதிகளின் பெயர்கள், அங்கிருந்து நகர் பகுதிக்கு உள்ள தொலைவை அறிந்து கொள்ள உதவுகின்றது.
இந்த பலகைகள் மழை, வெயிலில் நீண்ட காலமாக இருப்பதால், அதில் குறிப்பிடப்பட்ட விவரங்கள் மறைய துவங்கி பல இடங்களில் வழிகாட்டி பலகையில் கொடுக்கப்பட்ட தகவல் தெரியாமல் இருந்தது.
இதனால் வெளியூரில் இருந்து ஊரகப்பகுதிகளுக்கு செல்பவர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் விருதுநகர் நெடுஞ்சாலைத்துறையினரால் பழைய வழிகாட்டி பலகைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் துவங்கியது.
விருதுநகரில் இருந்து எரிச்சநத்தம் வழியாக அழகாபுரி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலைகளான வத்திராயிருப்பு, மகாராஜபுரம், அழகாபுரி, விருதுநகர் நெடுஞ்சாலையில் அனைத்து பழைய தகவல் பலகைகளும் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது.
விருதுநகர் உட்கோட்டத்தில் நடைபெறும் பணிகளை கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவிக் கோட்டப்பொறியாளர் கணேசன், உதவிப் பொறியாளர் மதிவாணன் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.