/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஞ்சாலைகளை திறக்க வேண்டும் --மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்
/
பஞ்சாலைகளை திறக்க வேண்டும் --மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பஞ்சாலைகளை திறக்க வேண்டும் --மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பஞ்சாலைகளை திறக்க வேண்டும் --மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்
ADDED : பிப் 23, 2025 05:02 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் சி.ஐ.டி.யூ அலுவலகத்தில் தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். இதில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்காத மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.டி.சி பஞ்சாலைகளை இயக்க வேண்டும். 18க்கும் மேற்பட்ட கூட்டுறவு பஞ்சாலைகளை இயங்கியதில் தற்போது 6 மட்டும் இயங்குகிறது.
பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.