/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்பார்க்கும் பெற்றோர்
/
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்பார்க்கும் பெற்றோர்
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்பார்க்கும் பெற்றோர்
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்பார்க்கும் பெற்றோர்
ADDED : செப் 16, 2024 06:14 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு கிராமப்புற மாணவர்கள் சென்று வர கூடுதல் பஸ்கள் இல்லாததால் பஸ்சின் கூரையில் அமர்ந்தும், படிக்கட்டில் தொங்கி கொண்டும் பயணிக்கின்றனர்.
இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், காரியப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய நகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு தினமும் கிராமப்புற மாணவர்கள் சென்று வருவது போருக்கு சென்று வருவது போல் உள்ளது.
கிராமங்களுக்கு காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் கிடைக்கும் பஸ்களில் படிக்கட்டில் தொங்கிய படியும் கூரைகளில் உட்கார்ந்தும் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
செப். 10ல் பெரியவள்ளிக்குளத்தில் இருந்து விருதுநகர் நோக்கி காலையில் வந்த தனியார் பஸ்சின் கூரையில் அமர்ந்தும், படிக்கட்டில் தொங்கிய படியும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணித்தனர். போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருப்பதால் கூரையில் அமர்ந்த மாணவர்கள் கீழே தவறி விழுந்தால் பின்னால் வரும் வாகனங்களில் மோதி பலியாகும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலை மாவட்டம் முழுவதும் தொடர்கிறது. எனவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் செல்ல ஏதுவாக காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.