/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்ச்களில் குருத்தோலை பவனி கிறஸ்தவர்கள் பங்கேற்பு
/
சர்ச்களில் குருத்தோலை பவனி கிறஸ்தவர்கள் பங்கேற்பு
ADDED : மார் 25, 2024 06:48 AM

விருதுநகர், : விருதுநகர் மாவட்ட சர்ச்களில் குருத்தோலை பவனி நடந்தது.
இன்னாசியார் சர்ச்சில் மறைவட்ட அதிபரும், சர்ச் பாதிரியாருமான அருள்ராயன், உதவி பாதிரியார் கரோலின் சிபு தலைமையில் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
உன்னதங்களிலே ஓசன்னா கிறிஸ்து ராஜா வாழ்க, மகிமையின் மன்னவருக்கு ஓசன்னா என்று முழங்கி கொண்டும் ஜெபங்கள் செய்தும் கிறிஸ்து வருகை பாடல்களை பாடிக் கொண்டும் சென்றனர்.
குருத்தோலை பவனி ஊர்வலம் சர்ச்சில் புறப்பட்டு நகராட்சி அலுவலகம், ரயில்வே மேம்பாலம், அருப்புக்கோட்டை ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை வழியாக மீண்டும் சர்ச் வந்தடைந்தது.
பாண்டியன் நகர் சவேரியார் சர்ச்சில் உயர் மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு தாமஸ் வெனிஸ், பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் இமானுவேல், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம் தலைமையில் நடந்தது.
ஆர்.ஆர்., நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பாதிரியார் பீட்டர் ராய், உதவி பாதிரியார் அருள்தாஸ் தலைமையிலும், அருப்புக்கோட்டை சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார் தாமஸ் எடிசன், சிவகாசி லுார்து அன்னை சர்ச்சில் பாதிரியார் ஜான் மார்ட்டின், சாத்துார் திருஇருதய ஆண்டவர் சர்ச்சில் காந்தி, சாத்துாரில் உள்ள ஒத்தையால் அற்புதகுழந்தை ஏசு சர்ச்சில் ஜான்மில்டன் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது.
விருதுநகர் டி.இ.எல்.சி., சர்ச்சில் பாதிரியார் ஜெபாஸ்டியன்தலைமையில் வழிபாடு நடந்தது.
சர்ச் வளாகத்திற்குள் பவனி வந்தனர். மதுரை ரோடுயோவான் சர்ச்சில் போதகர் ஜோ டேனியல் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது.
பாண்டியன் நகர் மாற்கு சர்ச்சிலும் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கிறிஸ்தவ ஐக்கிய குருத்தோலை பவனி மறை வட்ட பங்கு தந்தை சந்தன சகாயம் தலைமையில் நடந்தது.
சி.எஸ்.ஐ.,சர்ச் பாதிரியார் பால் தினாகரன், திரு இருதய ஆண்டவர் சர்ச்சின் உதவி பாதிரியார் செல்வநாயகம் மற்றும் அருள் சகோதரிகள் வழிநடத்தினர்.
ஏராளமான இறை மக்கள் கைகளில் குருத்து ஓலைகளை ஏந்தி திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக திரு இருதய ஆண்டவர் சர்ச்சுக்கு வந்தது. அங்கு திருப்பலி நடந்து விழா நிறைவடைந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திகுளம் சர்ச்சில் சபை குரு அருள் தன்ராஜ் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது.
ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

