/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சி மினி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் இருக்கை சேதம்
/
நகராட்சி மினி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் இருக்கை சேதம்
நகராட்சி மினி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் இருக்கை சேதம்
நகராட்சி மினி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் இருக்கை சேதம்
ADDED : ஆக 29, 2024 04:50 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகர் நகராட்சி மினி பஸ் ஸ்டாண்டில் பயணிகள்இருக்கைகள் சேதமடைந்து இருப்பதால் பயணிகள் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை காந்தி நகர் மேம்பாலம் அருகில் நகராட்சி சார்பாக ஒருங்கிணைந்த நகர் புற மேம்பாட்டு குழுமம் திட்டத்தின் கீழ் 90 லட்சம் நிதியில், 2019 ல், மினி பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சுழி, நரிக்குடி, பரமக்குடி, ராமேஸ்வரம், சாயல்குடி, பெருநாழி உட்பட ஊர்களுக்கு காந்திநகர் மினி பஸ் ஸ்டாண்ட் வந்து பஸ்கள் செல்லும். தினமும் இங்கு 500க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்கள் ஏறி செல்வர்.
பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட பயணிகள்இருக்கை போட்ட சில மாதங்களிலேயே சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நின்று கொண்டே இருக்க வேண்டியுள்ளது. வயதானவர்கள் உட்கார முடியாமல் சிரமப்படுகின்றனர்.
பயணிகள் நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் தேவையான இருக்கை வசதிகளை செய்து தர வேண்டும்.