/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே சுரங்கப்பாதை பணிக்காக காத்திருக்கும் பயணிகள்
/
ரயில்வே சுரங்கப்பாதை பணிக்காக காத்திருக்கும் பயணிகள்
ரயில்வே சுரங்கப்பாதை பணிக்காக காத்திருக்கும் பயணிகள்
ரயில்வே சுரங்கப்பாதை பணிக்காக காத்திருக்கும் பயணிகள்
ADDED : ஆக 07, 2024 07:47 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோடு மேம்பாலத்திற்கு மாற்று பாதையாக தொடங்கப்பட்ட இருப்புப்பாதை காட்சி பொருளாகஉள்ளதை விரைந்து செயல் படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சி கிழக்கு பகுதியில் உள்ள சத்திரப்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு போக்குவரத்து தடையாக இருந்த ரயில்வே மேம்பாலத்திற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டி தொடர் கோரிக்கையால் கடந்த ஆண்டு முடிவடைந்து நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட பெரு வாகனங்களின் போக்குவரத்திற்கு மாற்றாகமேம்பாலத்திற்கு கீழ் பகுதி டி.பி மில்ஸ் ரோட்டில் இருந்து அடுத்த பகுதியை கடக்க மேம்பாலம் கீழ்புறம் வழியே கடந்து செல்ல சுரங்கப்பாதை பணிகளும் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கியது.
இந்நிலையில் பால பணிகளுக்கு முன்பே நடைமுறைக்கு வர வேண்டிய சுரங்கப்பாதை தற்போது வரை அதற்கான சிமெண்ட் சிலாப்பு பணிகள் முடிந்து காரணம் தெரியாமல் காட்சி பொருளாக மாறி இருந்து வருகிறது.
இதனால் தொழிலாளர்கள், சைக்கிளில் செல்வோர், மாணவர்கள் விபத்து குறித்து அறியாமல் தண்டவாளத்தை கடந்து செல்வது தொடர்ந்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் ரயில்வே சுரங்கபாதை பணியை விரைவில்துவக்க ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.