/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கார்னேசன் பள்ளித்தெருவில் போடப்பட்ட பேவர் ப்ளாக் ரோடு
/
கார்னேசன் பள்ளித்தெருவில் போடப்பட்ட பேவர் ப்ளாக் ரோடு
கார்னேசன் பள்ளித்தெருவில் போடப்பட்ட பேவர் ப்ளாக் ரோடு
கார்னேசன் பள்ளித்தெருவில் போடப்பட்ட பேவர் ப்ளாக் ரோடு
ADDED : ஜூலை 12, 2024 04:03 AM

சாத்துார்: சாத்துார் காமராஜபுரம் கார்னேசன் பள்ளி தெருவில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டது.
காமராஜபுரம் கார்னேசன் பள்ளி தெருவில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் திட்டமும் புதிய கூட்டுக் குடிநீர் குழாய் பதிக்கும் திட்டமும் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.
இதற்காக இந்த தெருவில் போடப்பட்டிருந்த பேவர்பிளாக் ரோடு தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக தெரு மாறியது. இதன் காரணமாக இந்தப் பகுதி மக்கள் மிகுந்த அவதிப்பட்டனர்.
ரோடு தோண்டப்பட்டதால் பலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் இந்தப் பகுதியில் பணிகளை முடித்து பேவர் பிளாக் ரோடு அமைத்தது. இதனால் அப்பகுதியினர் தினமலர் நாளிதழை பாராட்டினர்.