/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜூலை 16ல் ஓய்வூதியர்கள்குறைதீர் கூட்டம்
/
ஜூலை 16ல் ஓய்வூதியர்கள்குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 02, 2024 06:32 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில்,சென்னை ஓய்வூதிய இயக்குனர் முன்னிலையில் ஜூலை 16ல் நடக்கிறது.
மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள்,குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம், இதர பலன்கள் பெறுவதில் பிரச்னைகள் இருந்தால் ஜூன் 28 முதல் ஜூலை 6 தேதிக்குள் கலெக்டருக்கு இரட்டைப் பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பங்களில் 'ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு' எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும், என்றார்.