ADDED : ஆக 06, 2024 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் 4 சதவீத அகவிலைப்படியை அறிவிப்பது, முறையான ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகாயி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வின் பேசினர்.