ADDED : ஆக 07, 2024 07:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டி அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் விருதுநகரில் கருவூல அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ராமஸ்ரீனிவாசன், ராமசுப்புராஜ், ஓய்வூதியர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சிவபெருமான் பேசினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் வேலுச்சாமி, போஸ், சந்தியாகப்பன், மாரிக்கனி, சந்திரராஜன், மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.