/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசிய நெடுஞ்சாலையில் கழிவுகள் துாய்மைப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
/
தேசிய நெடுஞ்சாலையில் கழிவுகள் துாய்மைப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
தேசிய நெடுஞ்சாலையில் கழிவுகள் துாய்மைப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
தேசிய நெடுஞ்சாலையில் கழிவுகள் துாய்மைப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 03, 2025 07:19 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வாறுகால்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு காணப்படுகிறது. இதனை சுத்தப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நகரில் ஆண்டாள் தியேட்டரில் இருந்து திருப்பாற்கடல், தேரடி, சர்ச் சந்திப்பு, உழவர் சந்தை, பெரிய மாரியம்மன் கோயில், ராமகிருஷ்ணபுரம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வழியாக இந்திரா நகர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள கழிவுநீர் வாறுகால்களில் கழிவுகள் தேங்கி அடைபட்டு சுகாதாரக்கேடு காணப்படுகிறது.
சில நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு, கொசுத்தொல்லை ஏற்பட்டு வருகிறது.
மேலும் பல இடங்களில் கழிவு நீர் வாறுகால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்ய முடியாத நிலையுள்ளது. இதனையும் அகற்றி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள கழிவுகளை முழு அளவில் சுத்தம் செய்து துாய்மை பகுதியாக உருவாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.