/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எம்.புதுப்பட்டியில் சேதமான மேல்நிலை குடிநீர் தொட்டியால் மக்கள் அச்சம்

ADDED : ஜூலை 10, 2024 07:01 AM

சிவகாசி, : சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே உயிர் பலி வாங்க காத்துக் கொண்டிருக்கும் சேதமடைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டியின் மூலமாக இப்பகுதியினருக்கு குடிநீர் வினியோகம் செய்த நிலையில் சேதம் அடைந்தது.
2013ல் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போதும் பயன்பாட்டில் உள்ள இத்தொட்டியின் அனைத்து துாண்களும் முற்றிலும் சேதம் அடைந்து கம்பிகளால் தாங்கி நிற்கிறது. மேலும் தொட்டியின் மேற்பகுதியும் சேதம் அடைந்துள்ளது. சேதம் அடைந்த தொட்டி மங்களம் மெயின் ரோட்டின் ஓரத்தில் உள்ளதால் எந்நேரமும் போக்குவரத்து நிறைந்திருக்கும். மேலும் இத்தொட்டியின் அருகே குளியல் தொட்டி உள்ளது. அப்பகுதியினர் குளிக்க, துணி துவைக்க இங்குதான் வருகின்றனர். அந்த நேரத்தில் தொட்டி இடிந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு விடும். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.