/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண்ணெண்ணெய் வழங்காததால் மக்கள் பாதிப்பு
/
மண்ணெண்ணெய் வழங்காததால் மக்கள் பாதிப்பு
ADDED : ஏப் 27, 2024 03:49 AM
காரியாபட்டி: மல்லாங்கிணர் பகுதியில் ஏப். மாதத்திற்கான மண்ணெண்ணெய் இதுவரை ரேஷனில் வழங்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மல்லாங்கிணர் பகுதியில் 12 ரேஷன் கடைகளில், 8 ஆயிரத்து 500 க்கு மேற்பட்ட கார்டுகள் உள்ளன. அரிசி, சீனி, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏப். மாதத்திற்கான அரிசி, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், மண்ணெண்ணெய் இதுவரை வழங்கப்பட வில்லை. எப்போதும் 15 தேதிக்குள் மண்ணெண்ணெய் வழங்கப்படும்.
ஆயிரத்து 300 ரேஷன் கார்டு உள்ள கடைக்கு 64 லிட்டர், 970 கார்டுகள் உள்ள கடைக்கு 48 லிட்டர் மண்ணெண்ணெய் சப்ளை செய்யப்படும் என தெரிவித்ததால், விற்பனையாளர்கள் மண்ணெண்ணெய் எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
மல்லாங்கிணர் பகுதியில் பெரும்பான்மை மக்கள் கிராமங்களில் வசிப்பதினால் மண்ணெண்ணெண்யை பயன்படுத்தி வருகின்றனர். தற்போதய தட்டுப்பாட்டினால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்க்குள்ளாகி வருகின்றனர்.
விஜயலட்சுமி, டி.எஸ்.ஓ., காரியாபட்டி. கூறியதாவது.
குடோன்களுக்கு மண்ணெண்ணெய் வரத்து பற்றாக்குறையாக உள்ளது. அனைத்து கடைகளுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த மாதம் வேறு வழி இல்லை.
இருப்பதைக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதத்தில் இருந்து சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

