/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சொக்கலிங்கபுரத்தில் கரடு முரடான ரோடு மக்கள் அவதி
/
சொக்கலிங்கபுரத்தில் கரடு முரடான ரோடு மக்கள் அவதி
ADDED : ஜூலை 22, 2024 04:22 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே வி.சொக்கலிங்கபுரத்தில் தார் பெயர்ந்து ஜல்லி, மண் ரோடாக மாறி கரடு முரடாகஉள்ளதால் அக்கிராம மக்கள் கடும் அவதியை சந்திக்கின்றனர்.
விருதுநகர் அருகே வி.சொக்கலிங்கபுரம் உள்ளது. இங்கு பட்டாசு தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். தினக்கூலிகளான இம்மக்கள் வசிக்கும் பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதி குறைபாடு உள்ளது. குறிப்பாக இவ்வூர் செல்லும் ரோடு மோசமான நிலையில் உள்ளது. இதனால் தினசரி வேலைக்காக வெளி பகுதிகளுக்கு சென்று வரும் அவ்வூர் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இங்குள்ள ரோடு தார் பெயர்ந்து ஜல்லி, மண்ணாக மிகவும் மோசமான நிலையில் கரடு முரடாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இந்த ரோட்டை சீரமைத்து புதிய ரோடு போட வேண்டும். இல்லையெனில் இந்த பாதை இன்னும் மேடு, பள்ளமாக விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.