/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சி பகுதிகளில் வாறுகால்களை சுத்தம் செய்வதில் நீடிக்கும் சுணக்கம்; மாலை நேர மழையால் தொற்று பரவும் அபாயம்

ADDED : ஆக 09, 2024 12:21 AM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பகுதிகளில் வாறுகால்களை சுத்தம் செய்வதில் சுணக்கம் நீடிப்பதால் மாலை நேர மழை பெய்யும் நேரங்களில் துர்நாற்றம் வீசுவதோடு கழிவுகள் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது.
விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் பாதாளசாக்கடை திட்டத்தில் ஆங்காங்கே லீக் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது நகராட்சி நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையால் லீக் ஆவது குறைந்துள்ளது. ஆனால் அதே நேரம் வாறுகால்கள், பஸ் ஸ்டாண்ட், மெயின் தெருக்களில் செல்லும் வடிகால்கள் கழிவுநீர் தேக்கமாக மாறி நோயை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றை மாதம் ஒரு முறை கூட நகராட்சி துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்வதில்லை. வாறுகால், வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பையை எடுத்தாலே நீரோட்டம் ஏற்படும். ஆனால் அதை கூட செய்யாததால் நகரின் பல பகுதிகளில் சுகாதாரக்கேடும், துர்நாற்றமும் அதிகளவில் உள்ளது. இது குறித்து மக்கள் நகராட்சி நிர்வாகத்தில் புகார் ஏடுகளில் எழுதி வைத்தாலும் நடவடிக்கை இல்லை என்கின்றனர்.
பர்மா காலனி, பாவாலி ரோடு, பாத்திமா நகர், கிருஷ்ணமாச்சாரி ரோடு, மதுரை ரோடு, கச்சேரி ரோடு ஆகிய பகுதிகளில் இந்த பிரச்னை நீண்ட மாதங்களாக இருந்து வருகிறது. தற்போது மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் இந்த மழையால் வாறுகால் பெருகி ரோட்டிற்கு வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக மாதக்கணக்கில் தேங்கி கிடப்பதால் கொசுத்தொல்லையையும் ஏற்படுத்துகிறது. நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது நகர்ப்பகுதிகளில் கொசு மருந்து அடித்தாலும், வாறுகால்களை சுத்தம் செய்வது அவசியமாக உள்ளது. எனவே அதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.