ADDED : ஆக 24, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் ஸ்ரீதேவி பூதேவி ஹரிச்சக்கர மூர்த்தி பெருமாள் கோயில் வருஷாபிேஷகம் நடந்தது.
இதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள், புண்ணியகாவாசனம் உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
காலை 9.05க்கு வருடாபிஷேகம் நடந்தது பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செயல் அலுவலர் தேவி, ஆய்வாளர் சந்திரசேகர், அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன், உறுப்பினர்கள் குமரேசன், இளங்கோவன், அரியமலை உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.