/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் பணியால் சுருங்கிய ரோடு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
/
குழாய் பணியால் சுருங்கிய ரோடு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
குழாய் பணியால் சுருங்கிய ரோடு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
குழாய் பணியால் சுருங்கிய ரோடு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : ஏப் 17, 2024 06:36 AM

விருதுநகர், : விருதுநகர் பாத்திமா நகர் அருகே சிவகாசி ரோட்டின் ஓரம் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டி சுருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.
விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் பிரதான ரோடு முக்கியமான ரோடாக உள்ளது. இந்த ரோட்டில் அதிகப்படியான வாகனங்கள், பஸ்கள் செல்கின்றன. சிவகாசியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வாகனங்களும் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. இந்த ரோடு உள்ள பாத்திமா நகர் பகுதியில் சில மாதங்கள் முன் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது.
இதற்காக அதன் குடியிருப்பு பகுதிகளில் ரோடு தோண்டப்பட்டது. இந்த பணியின் நீட்சியாக சிவகாசி ரோட்டிலும் ஓரமாக தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. இதில் ரோட்டின் ஒருபுறத்தில் அளவு குறைந்து விட்டது. இதனால் சிறிய பகுதி மட்டுமே ரோடாக உள்ளது. மற்ற பகுதி மண் மேடாக சேதமடைந்துள்ளது.
பிரதான ரோடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இப்பகுதியை கடக்கின்றனர். சறுக்கி விழும் அபாயம் உள்ளது. நகர் முழுவதும் இதே நிலை என்றாலும், முக்கிய ரோடாக சிவகாசி ரோட்டை முழு அளவில் செப்பனிட வேண்டுமென அப்பகுதியினர் விரும்கின்றனர்.

