/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் மக்களுக்கு இடையூறாக பிளக்ஸ்கள்
/
காரியாபட்டியில் மக்களுக்கு இடையூறாக பிளக்ஸ்கள்
ADDED : செப் 17, 2024 04:25 AM
காரியாபட்டி, : திருவிழா, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு முக்கிய இடங்களில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ்கள் வைப்பதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு போலீசார், உள்ளாட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு, அச்சுறுத்தும் வகையான வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ்கள் வைக்கப்படுகின்றன. பிளக்ஸ்களை வங்கி, நூலகம், பஸ் ஸ்டாண்ட், நிழற்குடை, போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக அளவில் வைக்கின்றனர். இதனால் வங்கி, பஸ்சுக்கோ, நூலகத்திற்கோ செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
உயரமான பிளக்ஸ்களால் காற்று அடிக்கும் சமயத்தில் ஆட்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது போன்ற பல்வேறு இடங்களில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு பின் பிளக்ஸ்கள் வைக்க தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் மீண்டும் பிளக்ஸ்கள் வைக்கும் கலாச்சாரம் தலை தூக்கி நிற்கிறது.
பிளக்ஸ்களால் இடையூறு ஏற்படுவதாக போலீசாருக்கும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பிளக்ஸ்கள் வைக்க போலீசார், உள்ளாட்சி நிர்வாகம் அனுமதி தரக்கூடாது. தடை விதிக்க வேண்டும். மீறி வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.