/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புரளியால் மலைப்பகுதியில் சாராய ஊறலை தேடும் போலீஸ், வனத்துறை ---
/
புரளியால் மலைப்பகுதியில் சாராய ஊறலை தேடும் போலீஸ், வனத்துறை ---
புரளியால் மலைப்பகுதியில் சாராய ஊறலை தேடும் போலீஸ், வனத்துறை ---
புரளியால் மலைப்பகுதியில் சாராய ஊறலை தேடும் போலீஸ், வனத்துறை ---
ADDED : ஜூலை 09, 2024 04:32 AM
ராஜபாளையம்: சாராய ஊறல் தொடர்பாக தொடர் புரளியால் மலையில் வனத்துறையினருடன் போலீசாரும் தொடர் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரம், கணபதி சுந்தர நாச்சியார்புரம் தமிழக அளவில் கள்ளச்சாராயம், வனவிலங்குகள் வேட்டைக்கு தற்போது வரை கருப்பு பட்டியலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவை தொடர்ந்து சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் தற்போதும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனை அடுத்து சேத்துார் ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனத்துறையுடன் இணைந்து கோட்டைமலை பீட் கருப்பசாமி கோயில் உள்ளிட்ட வனப்பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.