விபத்தில் வாலிபர் பலி
சேத்துார்: சேத்துார் அடுத்த சொக்கநாதன்புத்துார் குலாலர் தெருவை சேர்ந்த பொன்ராஜ் மகன் முருகன் 22. செங்கல் சூளை தொழிலாளி. தனது நண்பர் பேச்சியப்பன் உள்ளிட்ட மூவருடன் டூ வீலரில் பின்னால் அமர்ந்து ராஜபாளையம் வந்தபோது ரோட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். எதிரே வந்த தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர்கள் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் பச்சமடம் ஊருணி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த கம்மா பட்டியை சேர்ந்த தங்கேஸ்வரன் 25, விஜய் 24, இருவரை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. 25 கிராம் கஞ்சாவை கைப்பற்றி தெற்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
பஸ் மோதி தம்பதி காயம்
சிவகாசி: சிவகாசி நேரு காலனியைச் சேர்ந்தவர் சண்முகம் 65. இவர் தனது மனைவியுடன் டூவீலரில் திருத்தங்கல் ரோட்டில் சென்றபோது விருதுநகர் ரோசல்பட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஓட்டி வந்த தனியார் பஸ் மோதியதில் தம்பதி காயம் அடைந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒருவர் பலி
சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் 40. இவர் தனது டூவீலரில் என்.ஜி.ஓ., காலனி 5 வது தெருவில் சென்றபோது அங்குள்ள வாறுகாலில் தவறி விழுந்து இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.-