இளம் பெண் மாயம்
சிவகாசி: தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் மகள் கீர்த்திகா 18. சிவகாசியில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வந்த இவர் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி அலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனை அவர் தாயார், சகோதரர் கண்டித்தனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.-----
வழிப்பறி செய்த சிறுவர்கள்
சிவகாசி: திருத்தங்கல் நாடார் நடுத்தெருவை சேர்ந்தவர் அருண்குமார் 35. இவர் பேட்டை தெரு அருகில் நடந்து சென்ற போது டூவீலரில் வந்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் அவரை வழிமறித்து கட்டையால் அடித்து ரூ. 300 பறித்தனர். தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.------
பட்டாசு பறிமுதல்
சிவகாசி: பள்ளபட்டி இந்திரா நகரைச் சேர்ந்த மகேந்திரன் 45 ஆனந்த செல்வம் 35, ஆகியோர் அதே பகுதியில் விற்பனைக்காக பட்டாசு பதுக்கி வைத்திருந்தனர். இருவர் மீதும் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.--------
விபத்தில் பலி
சிவகாசி: பாறைப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் 58. இவர் தனது டூவீலரில் சாத்தூர் ரோட்டில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இதில் தடுமாறிய பாஸ்கர் சென்று கொண்டிருந்த லாரிக்கு அருகே கீழே விழுந்ததில், லாரி அவர் கால்களின் மேல் ஏறி இறங்கியதில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.---

