தாய் உட்பட சிறுமிகள் காயம்
விருதுநகர்: அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி 40. இவர் டூவீலரில் மார்ச் 26 மாலை மாலை 5:45 மணிக்கு பள்ளிகளில் படிக்கும் இரு மகள்களை அழைத்து கொண்டு அல்லம்பட்டி காமராஜர் நெடுஞ்சாலையில் வந்த போது கே.வி.எஸ்., பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த ஜெயகுமார் 55, மோதியதில் மீனாட்சி, இரு மகள்களும் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
நீரில் மூழ்கி மூதாட்டி பலி
விருதுநகர்: சூலக்கரை மேடு சத்ய சாய் நகரைச் சேர்ந்தவர் புஷ்ப லீலாவதி 84. இவர் சூலக்கரை மேட்டில் உள்ள கல்குவாரி வீட்டில் வசித்து வருகிறார். இவர் உடல் நிலை சரியில்லாததால் மகள் வீட்டில் வசித்தவர் மார்ச் 27 காலை 4:30 மணிக்கு குவாரி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் குவாரி நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் மாயம்
விருதுநகர்: ஆவுடையாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜீவா 45. இவர் மார்ச் 24 மதியம் 2:30 மணிக்கு ஆர்.ஆர்.நகரில் உள்ள அண்ணன் ரமேஷ் கண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இளைஞர் தற்கொலை
ராஜபாளையம்: ராஜபாளையம் கூரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் வெங்கடசுப்பிரமணியன் 27, திருமணம் ஆகவில்லை. சரியான வேலை கிடைக்காததால் மன வருத்தத்தில் இருந்தவர் வீட்டின் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமிகள் மாயம்
சாத்துார்: வெம்பக்கோட்டை மடத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்க மாரியம்மாள், 38. நேற்று முன்தினம் இவரது 17 வயது மகள் வீட்டில் இருந்தவர் மாயமானார்.
*சாத்துார் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள், 40. நேற்று முன்தினம் இவரது 17 வயது மகள் வீட்டில் இருந்தவர் மாயமானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

