பட்டாசு பறிமுதல்
சிவகாசி அம்மன் கோவில் பற்றி தென்பாகம் தெருவை சேர்ந்தவர் சக்தி மணிகண்டன் 34. இவர் முத்துராமலிங்கபுரம் காலனியில் உள்ள தனது வீட்டில் அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
-----
மனைவியுடன் பழகியவருக்கு உருட்டு கட்டை அடி
சிவகாசி கட்டளைப்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி 38. இவரது மனைவி வெண்ணிலா 34. இவர்களுக்கு 14, 12 வயதில் இரு மகள்கள் உள்ளனர். வெண்ணிலா தனது உறவுமுறை சகோதரரின் மகனான கணேஷ்குமாருடன் தவறான பழக்கத்தில் இருந்ததை மூர்த்தி கண்டித்தார். இதுகுறித்து மாரனேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்த நிலையில் , போலீசார் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தனர். இந்நிலையில் வெண்ணிலா தனது இளைய மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. தொடர்ந்து மறுநாள் வெண்ணிலா தனது மகளுடன் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார். அப்போது போலீசாரிடம், அவர் தனது கணவரிடம் வாழ விரும்பவில்லை எனக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி அவரது சகோதரி நந்தினி 26, ஆகியோர் கணேஷ் குமாரை கட்டையால் அடித்தனர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
------

