அனுமதி இன்றி பட்டாசு ஒருவர் கைது
சிவகாசி: சித்துராஜபுரம் சங்கர் நகரை சேர்ந்தவர் ஜெயவிக்னேஷ் 30. வெம்பக்கோட்டை ரோட்டில் உள்ள இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
வெவ்வேறு விபத்து இருவர் காயம்
சிவகாசி: துாத்துக்குடி மாவட்டம் மில்லர் புரத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் 59. இவர் தனது டூவீலரில் வெம்பக்கோட்டை ரோட்டில் சென்ற போது வெள்ளைச்சாமி ஓட்டி வந்த பில்டிங் கான்கிரீட் கலவை மிஷினுடன் கூடிய லோடுவேன் மோதியதில் கீழே விழுந்தவர் மீது கான்கிரீட் கலவை மிஷின் காலில் ஏறியதில் காயமடைந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
* நாரணாபுரம் ரோடு போஸ் காலனியை சேர்ந்தவர் காளீஸ்வரன் 21. இவர் முனீஸ்வரன் காலனி அருகே தனது டூவீலரில் சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசகன் 43, ஓட்டி வந்த கார் மோதியதில் காயமடைந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
சிவகாசி: கட்ட சின்னம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணசாமி 28. இந்நிலையில் இவர் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். நீச்சல் தெரியாத இவர் குளிக்கச் சென்ற போது தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.---
கட்டடத் தொழிலாளி பலி
தளவாய்புரம்: செட்டியார்பட்டி பால விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் 61, கட்டட தொழிலாளி. முகவூர் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் பழைய வீட்டின் மாடியில் கான்கிரீட் சிலாப் உடைக்கும் பணியில் ஈடுபட்ட போது கான்கிரீட் துண்டு சங்கரலிங்கம் மீது விழுந்ததில் இடுப்பு, தலை உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.