குட்கா பறிமுதல்: இருவர் கைது
சிவகாசி: சிவகாசி கிழக்கு எஸ்.ஐ., ஆனந்த் குமார் போலீசார் சாத்துார் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த காரை நிறுத்தி சோதனை செய்கையில் காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது கண்டறியப்பட்டது. ரூ. 24 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கார் உரிமையாளர் திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முனியசாமி, பெரியகுளம் தென் கரையைச் சேர்ந்த டிரைவர் சையது சுல்தானை 51, கைது செய்தனர்.
கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
சிவகாசி: வம்பிழுத்தான் முக்கு பகுதியில் பள்ளப்பட்டி ரோடு முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த சாமுவேல் 21, குமார் 19 ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர். இருவரையும் கிழக்கு போலீசார் கைது செய்து, ஒரு கிலோ 950 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.
தற்கொலை
விருதுநகர்: அல்லம்பட்டி செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரி 25. இவர் வீட்டில் மே 13 இரவு 11:45 மணிக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
போக்சோ: ஆட்டோ டிரைவர்கள் கைது
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சுந்தரமூர்த்தி,23, ஈஸ்வரன், 19, இருவரும் பள்ளி மாணவிகள் இருவரை, காதலிப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து இருவரையும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.