நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகனத்திற்கு தீ: இருவர் கைது
விருதுநகர்: கோட்டநத்தத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் 24. இவருக்கும் ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த கார்த்திக்கிற்கும் தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட மோதலில் கார்த்திக், நண்பர் ராஜேஷ், 16 வயதுடைய சிறுவன் சேர்ந்து அஜித்குமாருக்கு சொந்தமான தேர்வண்டியை தீ வைத்தனர். வச்சக்காரப்பட்டி போலீசார் கார்த்திக், ராஜேஷ் இருவரையும் கைது செய்தனர்.
கஞ்சா இருவர் கைது
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் மேற்கு தெருவை சேர்ந்த பார்த்திபன் 51, பாண்டியன் நகரை சேர்ந்த மாரீஸ்வரன் 40, ஆகியோர் ஆலாவூரணி பாண்டி கோயில் அருகே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தனர். இருவரையும் திருத்தங்கல் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.--