டூ வீலர் திருட்டு
சாத்துார்: சாத்துார் ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன், 27. நேற்று முன்தினம் காலை10:00 மணிக்கு வத்தல் மண்டபம் எதிரில் டூவீலரை நிறுத்திவிட்டு மண்டபத்திற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது டூவீலர் திருடு போய் இருந்தது.சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் பலி
சாத்துார்: சாத்துார் சின்னக் காமன்பட்டியை சேர்ந்தவர் மாரிச் செல்வம், 23. மே 15 இரவு 11:00 மணிக்கு வீட்டிற்கு டூவீலரில் வந்த (ஹெல்மெட் அணியவில்லை) போது முத்தால் நாயக்கன்பட்டி விலக்கில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தார்.மதுரை அரசு மருத்துவமனையில் மே 26அதிகாலை 4:15 மணிக்கு பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இருவர் காயம்
சாத்துார்: சாத்துார் சிலோன் காலனியை சேர்ந்தவர் செல்வநாயகம், 53. மே 25 இரவு 8:00 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பினார். எதிரில் டூவீலர் ஓட்டி வந்த சிலோன் காலனியை சேர்ந்த விக்னேஷ், 20. (ஹெல்மெட் அணியவில்லை) சைக்கிளில் மோதினார். இருவரும் காயமடைந்தனர். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி கவிழ்ந்து விபத்து
விருதுநகர்: கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் சுகுமார் 25. இவர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வேலுாரில் இருந்து கயத்தாருக்கு செல்வதற்காக விருதுநகர் அருகே பட்டம்புதுார் விலக்கில் நான்கு வழிச்சாலையில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வந்தார். அப்போது முன்னால் சென்ற வாகனத்தில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா: சிறுவன் உட்பட மூன்று பேர் கைது
சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்த சந்தன மாரியப்பன் 19, என்.ஜி.ஓ., காலனி பாலமுருகன் 19, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் திருத்தங்கல் கண்ணகி காலனி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர். மூன்று பேரையும் திருத்தங்கல் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
டூவீலர் மோதி பலி
அருப்புகோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணி, 65, இவர் நேற்று முன்தினம் காந்தி நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக ரோடு ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக பைக்கை ஓட்டி வந்த செம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த இருளாண்டி,31, (ஹெல்மெட் அணியவில்லை) மணி மீது மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.