தற்கொலை
சாத்துார்: சாத்துார் சத்திரப்பட்டி ஓ.பி.ஆர். தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், 47. மது குடிக்கும் பழக்கம் காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது அவர் துாக்கிட்ட நிலையில் உடல் அழுகி இறந்து கிடந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை பறிப்பு
விருதுநகர்: கலைவாணர் தெருவைச் சேர்ந்தவர் ஞானமுருகன் 42. இவர் மே 27 இரவு வீட்டில் மனைவி, மகள்களுடன் துாங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3:30 மணிக்கு வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் மகள் சித்ராவின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை பறித்து, பீரோவில் இருந்து ரூ. 10 ஆயிரம், அலைபேசியை திருடி சென்றுள்ளார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கண்மாயில் மூழ்கி மாணவன் பலி
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமல நாச்சியாபுரம் இந்திரா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்தன மாரியப்பன் மகன் ஜீவா 13. ஏழாம் வகுப்பு படித்து முடித்த இவர் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயில் மீன்பிடிக்க சென்றிருருந்தார். அப்போது கண்மாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் பலி
விருதுநகர்: ரோசல்பட்டி ஜக்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி 24. இவருக்கு மே 27 மதியம் 3:00 மணிக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.